1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified வியாழன், 30 மார்ச் 2023 (21:49 IST)

பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உடல் நசுங்கி உயிரிழப்பு

karur
கரூரில் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு.
 
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் - மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள்.  இன்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு வாசல் கதவை நீக்கி சரவணன் வெளியே வந்துள்ளார்.  
 
அப்போது இரண்டாவது மகன் சாய் மிதுன் என்ற ஒன்றரை வயது  குழந்தை வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பள்ளி வாகனத்தின் முன்பு குறுக்கே ஓடியபோது தந்தையின் கண் முன்பே குழந்தையின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
 
விபத்து குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனியார் பள்ளியின் வேன் மற்றும் ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 
 
வீட்டு வாசலிலேயே பள்ளி வாகனத்தில் மோதி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.