வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (21:42 IST)

100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகை ஆணை வழங்கிய ஆட்சியர்

karur
100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகை ஆணையை  ஆட்சியர் வழங்கினார்!
 
கரூர் மாவட்டத்தில் பட்டியலில் இடம்பெற்றுள்ள மேலை பழநியப்பன், ராசி பெரியசாமி ஆகியோருக்கு ஆட்சியரகத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உதவித் தொகைக்கான ஆணை வழங்கினார்
 
தமிழ் வளர்ச்சி-அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்குதல் திட்டம் 2021 - 2022 ஆம் ஆண்டிற்கு வல்லுநர் குழுவால் தெரிவு செய்யப்பட்ட 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பட்டியலுக்கு உயர்நிலைக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு-தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுதும் உதவித்தொகை வழங்குதல் ஆணையை கரூர் மாவட்டத்தில் பட்டியலில் இடம்பெற்றுள்ள மேலை பழநியப்பன், ராசி பெரியசாமி ஆகியோருக்கு ஆட்சியரகத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினரர். உடன் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் உயர்அதிகாரிகள்.