ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (14:16 IST)

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார் - பதை பதைக்கும் சிசிடிவி காட்சி!

கோவையிலிருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்த பதை பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறமாக பேன்சி மற்றும் பேக்கரி உள்ளது. திருச்சி சாலையை ஒட்டியுள்ள இந்த கடையில் கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து கடையின் முன்புற சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
 
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கார் அதிவேகமாக வந்து சுவற்றில் மோதி நிற்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பதபதைப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் நடந்து செல்லாததால் பெரும் விபத்து மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.