ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (16:41 IST)

நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்...

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து,  கமல்ஹாசன் தொகுப்பாளராக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2018 –ல் பங்குபெற்று ரசிகர்களிடம்  பிரபலமடைந்தார்.  

இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு தன்  நண்பர்களுடன் இணைந்து மாமல்லபுரம் காரில் சென்றபோது, விபத்து ஏற்பட்டது. இதில், இவரது தோழி வள்ளிசெட்டி பவனி உயிரிழந்தார்.

யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், 6 மாத சிகிச்சைக்குப் பின்னர், குணமடைந்து  சினிமாவில்  நடித்து வருகிறார்.

இந்த விபத்து குறித்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இவ்விபத்தில்,  கடந்த 21 ஆம் தேதி யாஷிகா நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது.

யாஷிக ஆகராகாத நிலையில்,  நீதிபதி.   23 ஆம் தேதி அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், 25 ஆம் தேதிக்குள் ஆஜராகவில்லை என்றால் யாஷிகாவை, போலீஸார் கைது செய்யலாம் என்று கூறப்பட்டது.

 இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில்  இன்று ஆஜரானார்.