திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:31 IST)

புத்தாண்டு கொண்டாட்டம் ஒட்டி இரு சக்கரவாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

Chennai
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாவட்ட போலீஸார் பல புதிய உத்தரவுகள் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில்,  புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் நாளை இருக்கும் முதல் போக்குவரத்துக்கு தடை என போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்த  நிலையில், தற்போது சென்னையில், நாளை மாலை 6 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர் போலீஸார்.

அதன்படி,இந்த அறிவிப்பை மீறி யாரேனும்  நாளை மாலை 6 மணிக்கு மேல் 2 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர்.