ஜனவரி 1 முதல் சென்னைக்கு கூடுதல் பேருந்துகள்: போக்குவரத்து துறை
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருவதற்கு வசதியாக சென்னைக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களிலிருந்து ஜனவரி 1-ஆம் தேதி முதல் சென்னை திரும்ப உள்ளனர். அவர்களின் வசதிக்காக தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
இந்த பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva