புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:53 IST)

நடிகர் விஜய் தங்கைக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..! வைரலாகும் கியூட் புகைப்படம்!

நடிகை சரண்யா மோகனுக்கு, அழகானப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை அவர் கணவர் தெரிவித்து குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 


 
தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளின் செல்ல தங்கையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சரண்யா மோகன் . இவர் தமிழில் விஜய் நடித்த ’காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 
 
பிறகு தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி  படத்தில் அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது.  வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் , வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்தினார் . தமிழ் தவிர, மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 


 
இதற்கிடையில் 2015 இல் தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இவர்களுக்கு ஆனந்த பத்மனாபன் என்ற ஒரு மகன் பிறந்தார். 
 
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த சரண்யாவுக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ’அன்னப்பூர்ணா’ என்று பெயர் வைத்துள்ளனர். இத்தகவலை அரவிந்த் கிருஷ்ணன் பேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்து குழந்தையின் கியூட்டான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.