திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (07:41 IST)

கேவலம் சொத்துக்காக குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்த அவலம்

சென்னையில் கேவலம் சொத்துக்காக குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசுக்கும், சொத்துக்கும் இருக்கும் மதிப்பு மனிதர்களுக்கு இல்லை. இந்த கொடுமையால் பல நேரங்களில் பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் சொத்துக்காக பெண் ஒருவர் அவரது தந்தையை ரௌடிகளை ஏவி வீட்டிலிருந்து தூக்கி வெளியே வீசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
சென்னை ஜேஜே நகரை சேர்ந்த ஜேசுராஜன். இவரது மனைவி கலா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் ஜேசுராஜன் கலாவின் தம்பி கோபாலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
 
போலீஸார் கோபாலிடம் விசாரித்ததில், ஜேசுராஜனின் சொத்துக்களை அபகரிக்க அவர் இப்படி செய்ததாக தெரியவந்தது. கோபாலின் பின்னணியில் யாரோ இருப்பதாக சந்தேகித்த போலீஸார் அவனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் சொத்துக்காக தனது அக்கா கலா மற்றும் அவரது பிள்ளைகளுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக கூறினான். 
 
இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். சொத்துக்காக அநியாயமாக குடும்பமே சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.