வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (08:59 IST)

டி.எஸ்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: சென்னையில் பரபரப்பு

கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறையினர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் அவ்வப்போது தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்து வருவது குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை அண்ணா நகரில் உள்ள டி.எஸ்.பி. முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை செய்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்தபோது லஞ்சம் கேட்டு மிரட்டியதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

டிஸ்பி முத்தழகுடன் பெண் ஒருவர் லஞ்ச பேரம் குறித்து பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் செய்திகள் வெளியானது. இந்த வாட்ஸ்அப் ஆடியோ வைரலாகியதை அடுத்து டி.எஸ்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் வெளிவரும் என்று லஞ்ச ஒழிப்பு அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன