1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (12:54 IST)

எரிந்து கொண்டிருந்த பிணம்: எடுத்து தின்ற நபர்: நெல்லையில் பெரும் பரபரப்பு

நெல்லையில் சுடுகாட்டில் இருந்த மூதாட்டியின் உடலை நபர் ஒருவர் தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுக்காவை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். முருகேசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
 
பொறுத்து பொறுத்து பார்த்த முருகேசனின் மனைவி, தனது 2 பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் முருகேசன் தனியாக வசித்து வந்தார். முருகேசனுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கமும் இருந்தாக தெரிகிறது.
 
இதற்கிடையே கடந்த சில நாட்களாக ஊரில் இருக்கும் சுடுகாட்டில் உள்ள பிணத்தை யாரோ சாப்பிடுகின்றனர் என வதந்தி கிளம்பியது. இதனை மக்கள் யாரும் நம்பவில்லை. 
 
இந்நிலையில் நேற்று அந்த ஊரில் பாட்டி ஒருவர் இறந்துபோகவே அவர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டார். அந்த பாட்டியின் உடலை முருகேசன் சாப்பிட்டதாக தெரிகிறது. இதனை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில்; புகார் அளித்தனர்.
 
விரைந்து வந்த காவல் துறையினர் அவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.