வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (12:19 IST)

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம்: மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியம்

சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கட்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருந்ததால், அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வாலிபர் ஒருவரிடம் தானமாக பெறப்பட்ட ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு செலுத்தப்பட்டது.
 
இதற்கிடையே அந்த வாலிபர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார். இது முழுக்க முழுக்க மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே. இவர்களின் கவனக்குறைவால் பாவம் அந்த அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது.