புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By

கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவேண்டிய உணவுப்பொருட்கள் எவை...?

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவுகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு  சில உணவுகளின் மனம் கர்ப்பிணி பெண்ணுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்  மாற்றத்தினாலே ஆகும்.
ஒரு சில மீனை கர்ப்ப காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். சுறா, வாள் மீன், ராஜா கானாங்கெளுத்தி மீன், ஓடு மீன்  ஆகியவற்றை நீங்கள் தவிர்ப்பது நல்லது.
 
மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். கருவுற்றிருக்கும் தாய் மது அருந்தினால் அது குறைப்பிரசவம், குறைபாடுகளுடன் குழந்தை, பிறப்புச் சிதைவு மற்றும் உடல் எடைக் குறைவான குழந்தை எனப் பல வகைகளிலும் வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்கும்.
 
கர்ப்பிணி பெண்கள் அரைநிலையில் வேக வைக்கப்பட்ட அல்லது பச்சை முட்டையை சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் வயிற்று போக்கு, வாந்தி பிரச்சனை, தலைவலி, அடிவயிற்றில் வலி ஏற்படுதல், வெப்ப நிலை உயர்தல் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படக்கூடும். 
 
முதல் மூன்று மாதங்களுக்கு காபி, டீ உள்ளிட்ட பானங்களைத் தவிர்த்தல் நல்லது. செயற்கை இனிப்பூட்டிகள் நிறைந்த உணவுகளைத்  தவிர்க்க வேண்டும்.
 
கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் நாள் ஒன்றுக்கு 300 மில்லி கிராம் அல்லது அதுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சமைக்காத கடல் உணவுகள், கோழி உணவு வகைகள் முற்றிலுமாக கருவுற்றிருக்கும் காலத்தில் தவிர்க்க வேண்டும்.
 
பச்சை பாலை கர்ப்பிணிகள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பச்சை பாலில் மிகவும் தீங்குவிளைவிக்கக்கூடிய மூன்று வகையான பாக்டீரியாக்கள் இருக்கிறது. அவை சால்மோனெல்லா, லிஸ்டேரியா. இ-கோலி, மற்றும் கிரிப்டோஸ்போரிடியம் ஆகும்.
 
கர்ப்பிணிகள் எப்போதும் இயற்கையான உணவை உட்கொள்வதே நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெமிக்கல் சேர்க்கப்பட அதிகம்  வாய்ப்பிருக்கிறது. எனவே, இதனால் பல வித பிரச்சனையை கர்ப்பிணிகளுக்கு தரவும் கூடும்.