திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (14:02 IST)

தேர்வு எழுத அனுமதிக்காததால் 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஹைத்ராபாத்தில் பள்ளி நிர்வாகம் மாணவியை தேர்வு எழுத விடாததால், விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஹைத்ராபாத் ரச்சகொண்டா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாய் தீப்தி என்ற மாணவி 9ம் வகுப்பு படித்து வந்தார். சாய் தீப்தி பள்ளிக் கட்டணத்தை செலுத்தாததால், அவரை பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத விடவில்லை, மேலும் அந்த மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தியுள்ளனர்.
 
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற மாணவி கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவி எழுதியிருந்த கடிதத்தில், என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, என்னை பரீட்சை எழுத விடாமல் அசிங்கப்படுத்திவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ரச்சகொண்டா போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த சமூக ஆர்வலர்கள் பலர், வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரிடையே, சகிப்புத் தன்மை குறைந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.