வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (08:12 IST)

17 வயது மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி மாணவனை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஔத்த கிராமத்தை சேர்ந்தவன் யுவன்ராஜ். இவன் ஒரு கல்லூரியில் படித்து வருகிறான். யுவன்ராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு 17 வயது சிறுமியை காதலித்து வந்தான்.
 
இந்நிலையில் சமீபத்தில் தனது நண்பர்களின் உதவியுடன் அந்த மாணவியை கடத்திச்சென்ற யுவராஜ் அயோக்கியன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளான்.
 
இதனையடுத்து போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் யுவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவனுக்கு உதவிய நண்பர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.