1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (11:07 IST)

மது என்று நினைத்து டெட்டாலை குடித்த மீனவர்:நடந்தது என்ன?

கடலூரில் மது என்று நினைத்து டெட்டாலை குடித்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் மது பழக்கம் உள்ள இளைஞர்கள், அதிகரித்து கொண்டே வருகின்றனர். மேலும் மதுவால் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி, கடலூரில், நாகராஜன் என்ற மீனவர் ஒருவர், மது என்று நினைத்து டெட்டாலை குடித்து உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

நாகராஜ் என்பவர் கடலூர், முதுநகர் சுனாமி குடியிறுப்பு பகுதியைச் சேர்ந்தவர். அவர் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர். அவருக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி வழக்கம் போல, கடலுக்கு சென்று மீன் பிடித்து வீட்டிற்கு வந்தபிறகு மது அருந்தியுள்ளார்.

பின்பு போதையானவுடன் மேலும் மது குடிக்கவேண்டும் போல தோன்ற, வீட்டிலிருந்த டெட்டால் பாட்டிலில் உள்ள டெட்டாலை, மது என நினைத்து குடித்துள்ளார்.

அதன் பின்பு நாகராஜனின் குடும்பத்தினர் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் முதுநகர் குடியிறுப்பு பகுதியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீஸார், நாகராஜ் போதையில் அவரே டெட்டாலை எடுத்து குடித்தாரா? அல்லது அவர் குடிக்கும் மதுவுடன் யாராவது டெட்டாலை கலந்தனரா? என்று விசாரித்து வருகின்றனர்.