வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (09:45 IST)

உல்லாசத்திற்கு சகல வசதி... பகீர் விளம்பரம்: இளசுகள் மொய்க்கும் காட்டேஜ்!

கோவையில் திருமணம் ஆகாத ஆண் பெண் சேர்ந்து தங்கிக்கொள்ளலாம் என விளம்பரப்படுத்தியுள்ள காட்டேஜால் சர்ச்சை கிளம்பியுள்ளது. 
 
வழக்கமாக ஹோட்டல் மற்றும் காட்டேஜ்களில் திருமணமாகத ஆண் பெண்ணை ஒன்றாக தங்கவைக்க மாட்டார்கள். ஆனால், கோவையில் திருமணம் ஆகாத ஆண் பெண் ஒன்றாக தங்குவதற்கு மட்டுமே இரு காட்டேஜ் இயங்கி வருகிறது. 
 
ஆம், கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனியார் நிறுவனம் வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டேஜ் போல நடத்தி வருகிறது. இந்த காட்டேஜ்ஜில் எந்நேரமும் இளசுகளின் கூட்டம் நிறம்பி வழிகிறதாம். 
இந்த காட்டேஜ் எப்போது முதல் இயங்கி வருகிறது என தெரியாத நிலையில், இப்பொழுதுதான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பார்வையில் பட்டுள்ளது. 
 
உடனடியாக் இது குறித்து மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு காட்டேஜில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சேர்ந்து தங்கி கொள்ளலாம் என்று விளம்பரங்கள் வெளியாகியுள்ளது. 
 
இதனால் எந்நேரமும் இங்கு இளம் பெண், ஆண் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது. இது போன்ற செயல்களால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும் என்பதால், இது போன்ற காட்டேஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.