புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (19:05 IST)

அத்திவரதரை தரிசிக்க சென்ற குடும்பம்.. பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

திருப்பூரிலிருந்து அத்திவரதரை தரிசிப்பதற்காக காரில் சென்றபோது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தந்தையும் 3 வயது மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் சிறுபூலப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவர், தனது 3 வயது குழந்தை விவன் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோருடன் அத்திவரதரை தரிசிக்க காரில் புறப்பட்டுள்ளனர். மேலும் இவர்களோடு, சுப்புராஜின் நண்பர் மகேந்திரன் என்பவரும், அவரது மனைவி மற்றும் குழந்தையும் அதே காரில் வந்துள்ளனர்.

காரை, சுப்புராஜின் மனைவி கிருத்திகா ஓட்டியுள்ளார். இந்நிலையில் தர்மபுரி அருகே சென்றுகொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. வேகமாக மோதியதால் சாலை ஓர பள்ளத்தில் இரு முறை விழுந்து தலைகுப்பற கவிழ்ந்தது. இந்த விபத்தில் தந்தை சுப்புராஜ் மற்றும் அவரது 3 வயது மகன் விவன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற மூன்று பேரும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.