புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (10:46 IST)

காதல் விவகாரம் - திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிப் படுகொலை

குன்றத்தூரில் திமுக பிரமுகர் ஒருவர் காதல் விவகாரத்தில் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் கிரிராஜன். இவர் சிறுகளத்தூரில் திமுக வார்டு உறுப்பினராக இருந்து வந்தார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும் ரியா, கண்மணி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
 
சந்தியாவின் தம்பி அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பாபு மறுப்பு தெரிவிக்கவே, சந்தியாவின் தம்பி தான் காதலித்த பெண்ணுக்கு கோவிலில் வைத்து தாலி கட்டிவிட்டு, தனது மாமாவான கிரிராஜன் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.
 
இதனையடுத்து இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்க கிரிராஜ் பாபுவிடம் கேட்டபோது, பாபு இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தன் மகள் ஓடிப்போனதற்கு கிரிராஜ் தான் காரணம் என நினைத்த பாபு, கிரிராஜை கொல்ல திட்டமிட்டார்.
 
கிரிராஜை போனில் தொடர்பு கொண்ட பாபு, சமாதானம் பேச அழைத்துள்ளார். இதனை நம்பிய கிரிராஜ், பாபு அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாபுவும் அவனோடு இருந்த ஆட்களும் கிரிராஜனை அரிவாளால் வெட்டியுள்ளனர். உயிருக்கு பயந்து ஓடிய கிரிராஜை, பாபு துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கிரிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பாபுவையும் அவனது கூட்டாளிகளையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.