1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஜூலை 2018 (20:49 IST)

ஜாமீன் கேட்டவருக்கு வித்தியாசமான நிபந்தனை விதித்த நீதிமன்றம்

ஒரு வழக்கில் ஜாமீன் கேட்கும் நபருக்கு நீதிமன்றம் நிபந்தனைகள் விதிப்பது வழக்கம். பொதுவாக காவல்நிலையத்தில் தினம் அல்லது வாரம் ஒருமுறை கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை தான் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டும். ஆனால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று அளித்த ஒரு ஜாமீன் மனுமீதான தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் கைகட்டி காவல்துறை அதிகாரி முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது
 
வாகன சோதனையின் போது போலீஸாருடன்  தகராறில் ஈடுபட்டு முன் ஜாமீன் கோரிய வழக்கில், மனுதாரர் இராஜராஜன் என்பவர் சார்பு ஆய்வாளர் முன் கைகளை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற  மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது 
 
இந்த உத்தரவு அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. மனுதாரர் தனது தவறை புரிந்து வருந்த வேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்ட இந்த வித்தியாசமான நிபந்தனைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.