திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (22:16 IST)

இந்தியன் 2 படத்தில் நடிக்க நிபந்தனை விதித்த நயன்தாரா

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2-வில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
கமல் ஹாஸன் பிசியாக இருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் படமாக்கத் துவங்கவில்லையாம். அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறார் ஷங்கர். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளாராம் நயன்தாரா. தன் நிபந்தனைகளை ஒப்பந்தமாக எழுதி அதில்  தயாரிப்பாளர்கள் தரப்பில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் என்றும் உள்ளாராம். அதில் நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன். முத்தக் காட்சிகளில் நடிப்பது  என்றால் முன்கூட்டியே கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாராம்.
 
ஏற்கனவே ஷங்கர் இந்தியன் 2 வேலையை துவங்கியுள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவே நயன்தாரா இவ்வாறு நிபந்தனைகள் விதித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிக்கின்றன.