திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (20:28 IST)

இணையத்தில் மகளின் அந்தரங்க வீடியோ! தட்டிக்கேட்ட தந்தை அடித்துக் கொலை!

இணையத்தில் தனது மகளின் அந்தரங்க வீடியோவை பகிர்ந்த சிறுவனை தட்டிக்கேட்க சென்ற தந்தை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சக்லாசி கிராமத்தை சேர்ந்தவர் மெல்ஜிபாய் வாஹிலா. எல்லைப்பாதுகாப்பு படை வீரரான இவரது 15 வயது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளியை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

சமீபத்தில் அந்த சிறுவன், மெல்ஜிபாயின் மகளின் அந்தரங்க வீடியோ ஒன்றை இணையத்தில் பரப்பியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மெல்ஜிபாய் இதுகுறித்து சிறுவனின் குடும்பத்திடம் பேச தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.

அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுவனின் குடும்பத்தினர் கூர்மையான ஆயுதங்களால் மெல்ஜிபாய் மற்றும் குடும்பத்தினரை மோசமாக தாக்கியுள்ளனர். இதில் மெல்ஜிபாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மெல்ஜிபாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், சிறுவனின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளுக்கு நடந்த கொடுமையை தட்டி கேட்க சென்ற தந்தை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K