செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (14:35 IST)

மர வேர்களுக்கு இடையே தூக்கி வீசப்பட்ட குழந்தை... திடுக் சம்பவம்

நெல்லை குளக்கரையில்  உள்ள ஒரு மரத்தில் வேர்களுக்கு இடையே ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ இரக்கமே இல்லாமல் வீசிச் சென்றுள்ளனர். இக்குழந்தையை மீட்ட போலீஸார், சிசுவை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் குளக்கரை என்ற பகுதியில் ஒரு மரத்தில் வேர்களுக்கு இடையில் ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ வீசிச் சென்றுள்ளனர். இந்நிலையில் குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டு அங்கு சென்றவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
 
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், குழந்தையை பத்திரமாக மீட்டு  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு  குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது.