செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (12:16 IST)

விக்ரம் ஆடியோ வெளியீடு எப்போது? வெளியான சூப்பர் தகவல்!

விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட, அது இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையடுத்து படத்தின் டிரைலர் அல்லது பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மே மாதம் மத்தியில் மிக பிரம்மாண்டமாக இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் இருக்கும் என சொல்லப்படுகிறது. அந்த விழாவை விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் ஆகியவை ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த நிகழ்ச்சியில் விக்ரம் டிரைலர் வெளியாகவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.