செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 மே 2021 (12:48 IST)

ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

ஒரு பக்கம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு பயன் தராது என்றும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் மத்திய மாநில அரசுகளை கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு ஒன்று மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த வழக்கை தாக்கல் செய்த மனுதாரர் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரவு நேரத்திலும் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிற மாநிலங்களில் ஊரடங்கின்போது கூட பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் ஆனால் தமிழகத்தில் மட்டும் போதும் இரவு நேரங்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இந்த மனுவை விசாரணை செய்த மதுரை ஐகோர்ட் கிளை இந்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முடிவில் ஊரடங்கு ரத்து செய்யப்படுமா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்