சமஸ்கிருத செய்திக்கு எதிராக வழக்கு: நீதிபதிகள் விதித்த நிபந்தனை!
சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகத்திலிருந்து பெரும் கண்டனங்கள் குவிந்தது
குறிபாக திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்ததோடு செத்துப்போன ஒரு மொழிக்கு எதற்காக செய்தி என்று கேள்வி எழுப்பினார்
இந்த நிலையில் சமஸ்கிருத செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த முறையீட்டுக்கு பதிலாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அறிவிப்பு செய்து உள்ளனர். எனவே இது குறித்த மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது