புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (12:28 IST)

சிறுமியை கொடுமை படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்குப் பதிவு..

சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் நடிகை பானுப்பிரியா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை தன்னுடைய வீட்டில் பணிக்கு அமர்த்தினார். ஒரு நாள் வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் மற்றும் ஐ பேடு, கை கடிகாரம் ஆகியவை காணாமல் போயுள்ளது. வீட்டில் பணி செய்த அந்த 16 வயது சிறுமியும், அவரது தாயாரும் தான் நகைகளை திருடியுள்ளனர் என பானுபிரியா குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.

இதனிடையே சிறுமியின் தாயார் தனது மகளை, பானுப்பிரியா குடும்பத்தினர் வன்கொடுமை செய்ததாக ஆந்திர மாநில காவல் துறையினரிடம் புகார் அளித்தார். மேலும் இதே சமயத்தில் பானுப்பிரியா குடும்பத்தினர் பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில், சிறுமியும் அவரது தாயும் நகைகளை திருடியது குறித்து புகார் அளித்தனர்.

இந்நிலையில் பானுப்பிரியா குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து சிறுமியின் தாயாரை போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து  தற்போது சிறுமியை கொடுமை படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதை தொடர்ந்து சிறுமியை பணிக்கு அமர்த்தியதற்காக குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடிகை பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்ய்ப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.