செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (17:02 IST)

”காப்பானை” காத்த நீதிமன்றம்.. சூர்யா திரைப்படத்திற்கு கிரீன் சிக்னல்

நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே காப்பான் திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை என்று ஜான் சார்லஸ் என்ற எழுத்தாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இயக்குனர் கே.வி,ஆனந்த், ஜான் சார்லஸ் யார் என்று எனக்கு தெரியாது என பதிலளித்தார். இதனையடுத்து அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் மீண்டும் மேல்முறையீடு வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனையடுத்து நடிகர் சூர்யாவின் “காப்பான்” திரைப்படம் வெளியிட தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.