கேரளாவில் மீண்டும் 144 தடை உத்தரவு: பொதுமக்கள் அதிர்ச்சி
கேரளாவில் மீண்டும் 144 தடை உத்தரவு: பொதுமக்கள் அதிர்ச்சி
இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டார் என்றாலும் அதன் பின்னர் கேரள மாநில அரசு எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது
ஒரு கட்டத்தில் கொரோனா இல்லாத மாநிலமாக கேரளா மாறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அம்மாநிலத்தில் அதிகமாகி வருகிறது. இதனால் கேரள அரசு மீண்டும் அதிகாரிகளை ஊக்குவித்து கொரோனா வைரஸ்க்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், உள்பட 10 மாவட்டங்களுக்கு நவம்பர் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது
தற்போதுதான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தற்போது மீண்டும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்