ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (09:44 IST)

இனி ரகசியமா கூட விளையாட முடியாது! – பப்ஜிக்கு முற்றிலுமாக தடை!

இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் தடைக்கு முன்னர் டௌன்லோட் செய்தவற்றையும் நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சீன மென்பொருட்கள், செயலிகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பப்ஜி விளையாட்டும் தடை செய்யப்பட்டது. இதனால் பப்ஜி விளையாட்டு ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் வலைதளங்கள் மூலமாகவும், வேறு வகையிலும் சிலர் பப்ஜி விளையாட்டை தரவிறக்கி விளையாடி வந்தனர்.

இந்நிலையில் பப்ஜி விளையாட்டை முழுவதுமாக தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு பப்ஜி விளையாட்டு செயலி கிடைக்கும் மறைமுக சர்வர்களையும் முடக்கியுள்ளது. இதனால் தற்போது இந்தியாவில் பப்ஜி முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.