விக்டோரியா கவுரி நீதிபதியா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர்கள்!
விக்டோரியா கவுரி நீதிபதியா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர்கள்!
விக்டோரியா கவுரி நீதிபதி ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கௌரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆவதற்கு சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலைய்ல் விக்டோரியாக கவுரியை நீதிபதி ஆக்குவதற்கு மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய விக்டோரியா கவுரியை நீதிபதி ஆக்க கூடாது என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு வரும் பத்தாம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran