வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (23:17 IST)

பெட்ரோல் நிரப்பும்போது காரில் தீப் பிடித்ததால் பரபரப்பு

karur
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி அருகே வள்ளுவர் பெட்ரோல் பங்கில்  கார் பெட்ரோல் நிரப்பும்போது தீ பிடித்து எரிந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத்துறையினர் வந்த பிறகு தீ அணைக்கப்பட்டது உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
 
ஒரு சில பெட்ரோல்  பங்குகளை தவிர கரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.   பெட்ரோல் பங்கில் பணியாற்றும் ஊழியர்கள் தீ அணைப்பான் பயிற்சி பெற்றவர்கள் பணியாற்றுவதும் இல்லை. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் லாபம் சம்பாதிப்பதற்காக குறைந்த சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்களை வைத்துள்ளனர் அவர்களுக்கு முன் அனுபவங்களும் மற்றும் தீ அணைப்பான் பயிற்சிகளும்  கை உறைகள் காலணிகள் போன்ற பாதுகாப்பான உபகரணங்கள்  கொடுக்காமலும் பணியாளர்களை வைத்துள்ளனர்.
 
உடனடியாக மாவட்ட நிர்வாகமும் பெட்ரோல் நிறுவனமும் சார்ந்த அதிகாரிகளும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளையும் ஆய்வு செய்ய வேண்டும். தீயணைப்பான் பயிற்சி பெற்றவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்
 
அங்கு வரும்வரும் பொது மக்களுக்கும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் மற்றும் vck கோரிக்கையாகும்