வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (11:29 IST)

செல்போன் திருடிய சிறுவன்.. தடுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!

திருப்பத்தூரில் செல்போன் திருடியதை கண்டித்த கல்லூரி மாணவியை சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள பரதேசிப்பட்டியில் கல்லூரி படித்து வரும் மாணவி ஒருவர் அவர் பாட்டியுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவியின் வீட்டிற்கு வந்த அந்த சிறுவன் அங்கிருந்த செல்போனை திருட முயன்று கல்லூரி மாணவியிடம் சிக்கியுள்ளான்.

அவனை கல்லூரி மாணவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் யாருமில்லாத நேரம் கல்லூரி மாணவி வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தியுள்ளான். அதை தடுக்க முயன்ற மாணவியின் பாட்டியையும் கத்தியால் தாக்கியுள்ளான். இதில் படுகாயமடைந்த மாணவியும், அவரது பாட்டியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K