1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 25 நவம்பர் 2023 (13:07 IST)

நிம்மதி அங்கே எனக்கு கிடைக்குமா? பிரபல இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த ராஜேஸ்குமார்

bhakiyaraj
தமிழ் எழுத்துலகின் மூத்த படைப்பாளி ராஜேஸ்குமார். இவர், 50 ஆண்டுகளாக தமிழ் எழுத்தாளராக இயங்கி வருகிறார்.

பல படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாக  திகழும் இவரது முதல் நூல் வாடகைக்கு  ஒரு உயிர் 1980ல்  வெளியானது. இவரது முதல் டெஸ்ட் டியூப் கல்கண்டு இதழில் வெளியானது. இதுவரை 1500க்கும் அதிகமான  நாவல்கள் எழுதியுள்ளார். இவரது நாவல்கள் சினிமாகவும், தொலைக்காட்சி தொடராகவும் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ராஜேஸ்குமாரை 80 களில் தொடர்பு கொண்ட அப்போதைய முன்னணி இயக்குனர் கே.பாக்யராஜ், கோவையை விட்டு சென்னைக்கு வாங்க, உங்களுக்கு இப்ப இருக்கிற புகழை விட அதிகம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இதற்கு ராஜேஸ்குமார், உண்மைதான் இங்கே கிடைக்கும் நிம்மதி  அங்கே எனக்கு கிடைக்குமா? என்று தெரிவித்துள்ளார்.

நேற்று கோவைக்கு 219 வது பிறந்த நாள் என்பதால் இதுகுறித்து அவரது வலைதள பக்கத்தில்  அவர் பதிவிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.