புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (08:57 IST)

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் பயணிகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சற்றுமுன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தீவிரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் மர்ம வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சென்னைக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக தீவிரவாதிகள் எஸ்எம்எஸ் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதனையடுத்து சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதல் பாதூகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன