புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (16:54 IST)

சென்னையில் பயங்கரம்: பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை

சென்னையில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை அவரது தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
 
சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் வசந்தி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது வசந்திக்கும் ஜெபராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியது.
 
இருவரும் நெருங்கிப் பழகவே வசந்தி கர்ப்பமுற்றார். இதனை வசந்தி தன் பெற்றோரிடம் மறைத்துள்ளார். ஆனால் 7வது மாதத்தில் அவர் தனது தாயிடம் சிக்கிக்கொண்டார். இதனால் பேரதிர்ச்சிக்கு ஆளான அவரின் தாய் குழந்தை பிறந்தவுடன் கொன்றுவிடும்படி வனிதாவிடன் கூறியுள்ளார்.
 
அதன்படி இரண்டு தினங்களுக்கு முன்பு, வனிதா குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் தனது தாய் மற்றும் காதலனின் உதவியோடு, அந்த பிஞ்சுக்குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
 
பின்னர் ஒன்றும்தெரியாததுபோல் குழந்தையை குப்பைத் தொட்டிக்குள் வீசியுள்ளார். சிசிடிவி மூலம் போலீஸார் இந்த கொடூர கொலையை செய்த மூவரையும் கைது செய்தனர். பிஞ்சுக்குழந்தயை பெற்றோர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.