பாகிஸ்தான் இணையதளத்திலிருந்து கேள்விகளை காப்பியடித்த தேர்வு வாரியம்
அருணாச்சல பிரதேச மாநில அரசு தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பாகிஸ்தான் இணையதளத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட கேள்விகள் இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அரசு பணிக்கான போட்டி தேர்வை ஏபிபிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் அரசு தேர்வுகளுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கும் இணையதளத்தில் இருந்து அதிகளவிலான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேள்வித்தாளில் இடம்பெற்று இருந்த தவறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேச மாநில தேர்வுகள் வாரியம் தன்னுடைய தார்மீக பொறுப்பை மீறி உள்ளது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த தேர்வி எழுதியவர்களுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். குஜராத் இடைத்தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு உள்ளது என எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.