வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (11:38 IST)

99 பேர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை: டி.என்.பி.எஸ்.சி அதிரடி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த 99 பேர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 40 பேர் தரப்பட்டியலில் வந்ததால் இதுகுறித்து விசாரணை செய்ய சிபிசிஐடி களமிறங்கியது. இந்த விசாரணையில் தேர்வு எழுதிய சிலர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் துணையுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்தது
 
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள், இடைத்தரகர்கள் ஆலோசனையின் பேரில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்துள்ளனர் என்பது தெரிய வந்ததால் இதுகுறித்து விசாரணை செய்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும்,  இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த முறைகேட்டில் ஈடுபட்டு தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 39 தேர்வர்கள் வந்துள்ளதாவும், இவர்களுக்கு பதில் வேறு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது