தொடர்புடைய செய்திகள்
- ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு.. சென்னையில் ஒருவர் கைது.. என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை..!
- புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது?.. நெட்பிளிக்ஸ் கொடுத்த அப்டேட்!
- 12 வயது, 14 வயது, 16 வயது சிறுமிகளுடன் காதல்.. சென்னை சிறுவன் உள்பட மூவர் கைது..
- பெயரை மாற்றி பல திருமணம் செய்து மோசடி! சீர்காழியை கலக்கிய மோசடி ராணி!
- டாஸ்மாக் ஊழியர்கள் நள்ளிரவில் திடீர் கைது.. என்ன காரணம்?
திருப்பூரில் மட்டும் 98 வங்கதேசத்தினர் கைது.. இன்னும் தொடரும் தேடுதல் வேட்டை..!
திருப்பூரில் இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 98 வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கொல்கத்தா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து அங்கிருந்து நேராக தமிழ்நாட்டுக்கு தான் வருகிறார்கள் என்றும் குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தங்களை வட இந்தியர்கள் என்று கூறிக்கொண்டு போலியான ஆதார் அட்டை காண்பித்து வேலைக்கு சேர்ந்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த சில நாட்களாகவே காவல்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் திருப்பூரில் உள்ள ஆடை நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 15 வங்கதேச இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனை அடுத்து இந்த மாதத்தில் மட்டும் 98 வங்கதேசத்தவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல் போலி ஆதார் அட்டைகளை கொடுத்து வேலைக்கு சேர வரும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
