1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. கவனம் ஈர்க்கும் வேட்பாளர்கள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (16:16 IST)

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 94 வயது மூதாட்டி காமாட்சி!

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 94 வயது மூதாட்டி காமாட்சி!
சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 94 வயது மூதாட்டி ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்களும் சுயேச்சைக் வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நடைபெறவிருக்கும் சென்னை மாநகராட்சி தேர்தலில் அடையாறு மண்டலம் பெசண்ட் நகர் 174 வது வார்டில் 94 வயது மூதாட்டி காமாட்சி என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்
 
தற்போதைக்கு தமிழகத்திலேயே அதிக வயதுடைய வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பித்தக்கது. இவர் அந்த தொகுதியில் செல்வாக்குடன் இருப்பதால் கண்டிப்பாக வெற்றி பெற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது