வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 16 மே 2018 (09:21 IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மட்டுமே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று காலை சரியாக 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், அதில் மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் பெற்றிப்ருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.1 விகிதமாக இருந்த நிலையில் 1 சதவீதம் குறைந்து இந்தாண்டு 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.