புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (13:21 IST)

கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் ஓவர் - ரஜினிகாந்த் பேட்டி

கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்திடம் டிசம்பர் 12 ஆம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர்,தனது பிறந்த நாளன்று கட்சி துவங்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று கூறினார்.
 
கட்சி துவங்குவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாக கூறினார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
 
மேலும் மீ டு விவகாரத்தை தவறானக் குற்றச்சாட்டுக்களுக்கு பயன்படுத்தக்கூடாது என கேட்டுக் கொண்ட ரஜினி வைரமுத்து தன் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.