9 வயது சிறுமிக்கு பாலியல் வன் கொடுமை ... முதியவர் மீது ’போக்சோ.’..

posco
Last Modified செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (15:18 IST)
சமீபகாலமாக நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துவிட்டன. சில மாதங்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது. இதில் 16 மனித மிருகங்கள் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது சென்னை மயிலாப்பூர் குடியிருப்பில் உள்ள சிறுமிக்கு அலெக்ஸ் தேவராஜ் என்ற முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிகிறது.
 
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதியவர் அலெக்ஸை மயிலாப்பூர் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்  பதிசு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :