1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 9 fishermen released from srilanka jail today

9 தமிழக மீனவர்கள் விடுதலை.. இலங்கையில் இருந்து தாயகம் திரும்ப ஏற்பாடு..!

மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த 25ஆம் தேதி நெடுந்தீவு மண்டபம் பகுதி மீனவர்கள் ஒன்பது பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நீதிமன்றம் மேற்கண்ட 9 பேருக்கும் விதித்த தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. 
 
இதனை அடுத்து இன்று ஒன்பது மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. விடுதலையான மீனவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா? அண்ணாமலை ஆவேசம்..!