1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 9 districts including chennai to have very heavy rain

அதி கனமழை எங்கெங்கு? பட்டியலிட்ட வானிலை மையம்!

சென்னை
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதி கனமழை என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை. 

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.  
 
இது இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டடுள்ளது. அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பெட்டை, திருவண்னாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
நாளை முதல் நீலகிரி, கோவையில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!