வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (16:41 IST)

வேலூரில் 75 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு!

வேலூரில் கடந்த 4 நாட்களில் மட்டும் 75 பேர் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் இப்போது வேலூரில் இந்த நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் அந்த பகுதியில் 75 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.