வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (16:15 IST)

ஜி வி பிரகாஷ் தேடிய கலைஞர்… விரைவில் வாய்ப்பு!

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் சமீபத்தில் ஒரு இசைக்கலைஞரை கண்டுபிடித்துத் தர சொல்லி சமூகலைதளங்களி ஒரு பதிவு செய்திருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், சமீபகாலமாக நடிகராகவும் இருந்து வருபவர் ஜி வி பிரகாஷ். இவர் சமீபத்தில் டிவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் ஒரு நாதஸ்வரக் கலைஞர் வீடு வீடாக சென்று வாசித்து யாசகம் பெறுகிறார். அவரின் வாசிப்பு திறமையால் கவரப்பட்ட ஜி வி அவரைக் கண்டுபிடிக்க யாராவது உதவினால் அவரை தன் பாடல்களுக்கு வாசிக்கப் பயன்படுத்திக் கொள்வேன் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் இசைக்குறிப்புகளை கச்சிதமாக வாசிக்கும் திறமையுள்ளவர் என்றும் கூறியுள்ளார்.

அதையடுத்து அந்த கலைஞர் பெங்களூருவில் வசிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரை தொடர்புகொண்ட ஜி வி பிரகாஷ் கொரோனா முடிந்ததும் விரைவில் அவருக்கு வாய்ப்பு தருவதாக கூறியுள்ளாராம்.