திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 மே 2023 (23:29 IST)

பைக்கில் செல்லும்போது செல்போன் பார்த்து சென்ற 3 பேர் விபத்தில் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள  இலங்கை தமிழர்  மறுவாழ்வு முகாமில் தயாளன், சார்லஸ்,ஜான் ஆகிய 3  இளைஞர்கள் வசித்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும் இன்று கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். மூவரும் செல்போனை பார்த்துக் கொண்டே சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, ஆந்திராவை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது பைக் மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்,  3 பேரில் உடல்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.