1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (21:32 IST)

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் 7000 அடி கனநீர்: வெள்ள அபாயம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்த காரணத்தாலும் கடந்த இரண்டு நாட்களாக நிவர் புயல் காரணமாகவும் தொடர் மழை பெய்து வருவதாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது
 
ஏரியின் கொள்ளளவு 22 அடியாக உயர்ந்த பின்னர் ஏரியில் உள்ள நீரை வெளியேற்ற பொதுப்பணித் துறையினர் முடிவு செய்தனர். நண்பகல் 12:00 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடியும், அதன் பின்னர் 3000 கன அடியும், நீர் வெளியேறிய இன்று மாலை நிலவரப்படி 7 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்திறப்பு அதிகரித்துள்ளதாக தற்போது 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார் இதனால் முடிச்சூர் பகுதிகள் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறிக் கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது