1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (15:19 IST)

திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் டிஸ்மிஸ்: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கூட்டறிக்கை!

திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக 7 அதிமுக கவுன்சிலர்கள் வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகின. 
 
இதனை அடுத்து திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 7 அதிமுக கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகிய இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.