வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 11 ஜூன் 2020 (10:02 IST)

போண்டா என வெடிகுண்டை கடித்த சிறுவன்: வாய் சிதறி மரணம்!

திருச்சியில் போண்டா என நினைத்து வெடிகுண்டை கடித்த சிறுவனம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருச்சியில் மீன்பிடிப்பதற்காக பாறையை உடைக்க பயன்படும் 3 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்துள்ளனர் தமிழரசன், மோகன்ராஜ். மீன்களை பிடித்துவிட்டு அதனை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பூபதியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். 
 
அப்போது அங்கு மீதமிருந்த வெடிகுண்டை வைத்துள்ளனர். இதனை போண்டா என நினைத்து அந்த வீட்டில் இருந்து 6 வயது சிறுவன் எடுத்து உண்ண, அவன் வாய் சிதறி உயிரிழந்தான். சிறுவனின் உடலை அவசர அவசரமாக அடக்கமும் செய்துவிட்டனர். 
 
இருப்பினும் இந்த விஷயம் போலீஸாருக்கு தெரிந்து தமிழரசன், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.